Tuesday, September 11, 2012

தமிழனுக்கு விளங்கும் இது.

தோற்றத்தால் நான் வேறு - பிறர் 
கண்ணோட்டத்தால் நான் வேறு. 
மொழிகள் பல அறிந்தவன் நான். 
அறிவதனில்  அகழ்ந்தவன் நான். 

எழுத்து எனது பிழைப்பு,
எழுதுவதால் உயர்வெனக்கு.
தமிழனென்ற திமிரெனக்கில்லை;
தமிழ் கற்றுக் கொடுத்த பாடத்தினால். 

தமிழ் மட்டுமே அழகால் உயர்ந்ததல்ல முட்டாள்களே. 
தமிழ் அழகானது ஒரு விதத்தில்,
தமிழ் பிற மொழிகளின் சிறப்புனர்ந்தது மூடர்களே.
தமிழ் பேச உம்மில் எத்தனை பேருக்கு தகுதி இருக்குறது ?!

அழகான தமிழை கொச்சைப் படுத்த பிறந்த கிருமிகளே!
நீர் தமிழுக்கு செய்யும் இழுவினால், 
தமிழை நிஜத்தில் காதலிக்கும் நான் 
எத்தனை முறை உம்மை அழிக்க நினைத்திருக்கேன் தெரியுமா?

ஆம் என் எழுத்தில் பிழைகள் உள்ளது - 
என் கருதுத்தில் பிழை கான் மூடா! 
நினைவு தெரிந்த நாளிலிருந்து எழுதுபவன் நான்
என் மொழியின் மேலுள்ள காதலால் மட்டுமே 

நீ யாரென்று நினைத்துப் பார்.
கேவலத்தின் மறு பெயர் நீ.
வேசம் போடுகிறேனென்று உணர முடியாத பிறவி நீ.
அசிங்கத்தின் அர்த்தம் நீ.

எத்தனை மொழி படித்துள்ளாய் நீ ?
திருக்குறள் ஒன்றின் பொருள் காண முயர்ந்துல்லாய நீ? 
அவமானம் நீ எனக்கு !
எனக்கும் என்னை போன்ற தமிழருக்கும்.

ஆயிரம் இனத்தவர் புரளி பேசலாம்.
பொய்யின் கேவலம் பகிர்ந்த தமிழன் நீ பேசலாமா?
ஆராயும் அறிவு நமக்குரியது,
நீயோ புறம் பேசியே வாழ்வை கடக்கிறாய்.

நீ இருப்பதால் தமிழுக்கோ, உலகிற்க்கோ, எனக்கோ, 
எந்த பயனும் இல்லை மிருகமே.
மடிந்து போ தமிழ் வாழ -
செத்தொழி எம் மொழி வாழ.

உன்னைப் போன்ற கோடி பேர் இருப்பதும் 
நிஜமான பத்துத் தமிழனிருப்பதும் ஒன்றே பேடியே.
அழிந்து போ என் மொழிக்காக. 
மறைந்து விடு உனக்கு துளியேனும் நன்றி இருந்தால்.

Thursday, November 24, 2011

பிறந்த திமிர்

ஜனணம் ஒரு சாதனையா?
இன்று வரை நினைத்ததில்லை அப்படி
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
பெரிதாய் இருந்ததில்லை
இருந்தும்
இன்று நாள் எனதே எனது
என்று நான் சிளமுறை நின்னைத்தே இருக்கிறேன்

இன்றும் அப்படியே
இன்று தான் பிறந்தேனாம்
எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை
பெற்றவள் சாதனையே இது
நான் என்ன செய்தேன் கொண்டாட ?
இருந்தும்
ஜனித்த தர்க்கத்தில் நாளை துவங்கினேன்
இன்று மீண்டும் பிறந்தேன் ஒருமுறை

மமதையில் வேலையை பார்க்க
சாலை கடந்து   நான்
பார்த்தது ஒரு நிஜம்
தெரு முனையில் ஒரு பிணம்
இறந்து விட்டார் ஒருவர்
இன்று  அவர் இறந்த தினம் 

அந்த வீட்டில் அமைதியும் துயரமும்
என் உலகில் மகிழ்ச்சி எப்படி?
முரண்பாடான உலகிது
உணர்தேன் நான் இன்று
நாள்தோறும் பிறப்புண்டு இறப்புண்டு
நான் எப்படி சிறப்பின்று ?

இருபத்திஐந்து ஆண்டுகள் முடிந்தது
எதுவும் சாதித்தாய் தெரியவில்லை
உயிர்பிழைதிருந்தேன் இதுவரை
இதுபோல் கொண்டாட்டம் எதுவரை?
நன்றி கடவுளுக்கு இன்று உயிர் நிலைத்திருப்பதற்கு
இந்த ஆண்டை பார்த்துவிட்டேன்
எதிர்பார்கிறேன் அடுத்த ஆண்டை

இன்றைய மாற்றம் தொடர்ந்தால்
அடுத்த ஆண்டின் முதிர்ச்சி
இன்னும் அழகாக இருக்கும்
இன்றும் இன்றுவரை இறந்த அனைவருக்கும்
என் செய்தி இது
நீங்கள் சென்று விட்டீர்கள்
வந்து விடுவோம் நாங்களும் விரைவில் :)
உறங்குங்கள் அமைதியில்...

இங்கெதுவும் மாறவும் இல்லை
மாறப்போவதும் இல்லை.

Wednesday, March 30, 2011

யார் நான் ?

நாட்கள் நிறைய ஆகிவிட்டது
உள்ளங்கையை உற்றுப் பார்த்து.

ரேகைகள் அல்ல தெரிவது;
மறைத்து வைத்த சரித்திரங்கள்.

கைபற்றிய வெற்றிகள்,
மூடி மறைத்த பாவங்கள்.

துடைத்து அழித்த கண்ணீர் துளிகள்,
நிஜமாய் உழைத்த உழைப்புகள்.

எல்லாம் தெரிகிறது
ரேகைக்கு பின்னால்.

புறங்கை தழும்புகள்
பூமேல் புழுதி போல.

விழுந்து எழுந்த நாட்களை,
விரோதம் சேர்த்த நாட்களை.

வலியை ரசித்த நேரங்களை,
உடலை வருத்திய பயிற்சிகளை.

காய்ந்தும் மறையாது
மறைத்து காட்டுகிறது.

எங்கெங்கோ சென்று
எப்படியோ கற்று

இங்கு, இன்று நான் யார்?
பதில் கையில் தெரியவில்லை.

கணங்களில் தெரிகிறது
முதிர்ச்சி இன்னும் தொடர்கிறது என்று.

Tuesday, March 29, 2011

நான் ஒரு நடிகன்


நான் நிற்பதும் நடப்பதும் பொய்.

நான் சொல்வதும் செய்வதும்,

நானாய் வரையறுத்ததே.


தத்துவம் பொய் என்பவன் நான்.

பொய் போல் ஒரு தத்துவம் சொல்கிறேன் கேள்.

உன்னை புரிந்து விட்டேன்,

உன்னை அறிந்து விட்டேன்,

என ஒருவன் எண்ணி விட்டால்;

அன்று நீ ஜெயித்து விட்டாய்.

உன் ஒப்பனைகள் உபயோகம் ஆகியது.

நடிப்புதான் உலகம்.

ஆயிரம் சொல்லி ஆயிரம் செய்தாலும,

ஆழத்தில் ரகசியம் இல்லா மனிதனுண்டா?

ரகசியமாய் நீ ரகசியம் வைத்திருப்பது தெரிந்தும்,

உன் முன்னே மெய்யாய் சிரிப்பவன் நான்.

நீயும் அப்படியே.

ஒவ்வொருவனும் இங்கு ஒரு கதை.

நீயும் கதைதான் நானும் கதைதான்.

கதைக்களத்தில் எல்லாம் உண்மையல்ல;

நீ படிப்பதும் நான் படிப்பதும்,

பொய்யாய் போகலாம்.

இதெல்லாம் அறிந்தும் 

உன்னை நண்பாவென ஒருவன் இருந்தால்;

அவனே நடிப்பில் சிறந்தவன்.

சில நேரங்களில் பொய்கள் சிறந்தது.

பொய் இல்லாது போனால்.

மெயகிங்கேது மதிப்பு ??

Tuesday, October 5, 2010

சமூகம் எனக்கு விரோதி



நினைத்துக்கூட பார்க்கவில்லை
இப்படியும் நான் நினைப்பேன் என

நானும் மதித்து இருந்தேன் தேசத்தை
நாளுக்கு நாள் நடப்பதெல்லாம் 
நன்மைக்கே என நம்பிக்கை 
எனக்கும் இருந்தது ஒரு நாளில் 

நான்கு மடங்கு பெருகிவிட்ட மக்கள் 
நாடெங்கும் குவிந்திருக்கும் வளம் 
ஊரெங்கும் ஓங்கி நிற்கும் ஒற்றுமை 
என்றெல்லாம் புகழ்ச்சிப் புலம்பல்கள் 
என் சிந்தனையையும் சிறைத்திருந்தது

நாட்கள் செல்லச் செல்ல 
நடப்பதை கவனிக்க மறுக்க முடியாமல் 
இந்நாட்களுக்கு முன் 
நடந்ததையெல்லாம் நடந்து பார்க்க 
நினைத்தது தவறு தான் 

வரலாற்றின் வழிகளில் 
வழிதவரித்தான் சென்றிருந்தேன் 

வரையறுக்கப்பட்ட வரலாறல்ல 
பள்ளி புத்தகங்களில் பதிக்கப்படாத 
மக்களிடம் மறைக்கப்பட்ட வரலாறு 

யாருக்கெல்லாம் தெரிந்திருந்ததோ 
மறைக்க என்னவெல்லாம் காரணமோ 
தெளிவாய் வரைந்த கோடுகளுக்கிடையில்
துல்லிய இடைவெளிகளை 
தெரிந்தே தான் அறுத்தார்களோ 

வெறுப்புக்கு விதை போடும் வரலாறு 
நம் மூதாதையரின் மூடத்தனம் 
அவர்கள் ரத்தத்தில் ஓடிய ரத்தவெறி 
அந்நாளின் ஆட்சி மகுட அறியாமை 

அணுக்களில் பிரயாணித்த அறியாமையுடன் 
கரு தரித்த கணம் 
துடிக்க வைத்த ரத்தத்தின் வெறியால் 
நாம் பிறப்பால் மூடர்கள்
நாம் பிறப்பால் வெறியர்கள் 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் 
அடியடியாய் வைத்து வந்த நாகரீகம் 
சமூகக் கோடுகள் சேர்ந்து நிற்க 
குறுநிலம் மாநிலமாகியும் 
ஒரு நிலமாய் ஒரு நாளும் இருந்ததில்லை 

இமயத்தின் மேல்பக்கமிருந்து 
ஊடுருவி  உள் நுழைந்து 
அன்று ஆக்ரமித்த ஆரியன் தான் 
இன்றும் ஆட்சி செய்கிறான் 

ஒரு பக்கம் கடலழிக்க
மறுபக்கம் ஆரியனடிக்க 
தமக்குள்ளும் வேற்றுமை தெறிக்க 
சிதரித்திரிந்தான் திராவிடன் 
அன்றே ஆரம்பிதத்திது 
திராவிடனின் விருந்தோம்பலே அவனுக்கு வினை 

ஆணவத்தால் முப்பதுக்கு மேல் பிரிந்த திராவிடன் 
அவன் முன்னோர் வகுத்ததில் 
பலவற்றை கழித்து பலதினை கூட்டி 
தவறாகக் கணித்தான் பெருகப் பெருக 


ஆக்கிரமிப்பு நிலத்தில் மட்டுமல்ல 
மதத்திலும் கூட 

ஒரே சிந்தனை பல வடிவங்களில் 
ஓர் இறை நம்பிக்கை 
வெவ்வேறு சமூகத்தில் 
வெவ்வேறு பெயர் 

ஒன்றாகக முயற்சியும் 
ஆளுமைக்கு மட்டுமே 
ஒன்றாக்க அன்று பிறந்தது 
பல உருவச் சிலைகள் 
புரிந்திராத இறைவனுக்கு 
பல கல் இணைகள் 

மூடத்தனம் முதி இருந்த நாட்கள் 
பல கதைகள் பதிக்கப்பட்டு
நிஜம் பலவும் அழிக்கப்பட்டு 
அடைத்திருந்த வழியை 
தூசி தட்டி திறக்க வந்த 
பலரில் ஒருவனே புத்தன் 
சிலை ஒழிக்க வந்து 
சிலயானவரில் அவனும் ஒருவன் 

இவ்வளவும் நடந்திருக்க 
நிலம் ஆனால் ஒன்றாகவில்லை

நிரந்தரமாய் இன்னிலையில் 
வடக்கும் தெற்கும் 
கோடிட்டு பிரிந்திருக்க 
குப்தனும் முகலாயனும் 
சோழனும் பாண்டியனுமாய் 
பெரிதும் சிறிதுமாய் 
நூறாய் மேலாய் பிளந்திருந்தது நிலம்

ஆங்கிலேயன் அடி இல்லாமல் போயிருந்தால் 
அருவதாய் அதற்கு மேலாய்
பிறிந்திருக்கும் இந்த நாடு 

அவன் தான் வரைந்தான் கோடுகளை 
மாறாக நடந்திருந்தால் 
மொழிக்கிரண்டு நாடுகளாய்
கோட்டுக்குள் மதத்தாலும் 
கோட்டினை நீட்டவும் 
சண்டையிட்டு சண்டையிட்டு 
சீனர்களிடம் சிக்கி சிதந்திருப்போம்

இருந்தும் பொய்யாய் புகழ் பாடி 
இல்லாத வரலாற்றை 
இயற்றிய அந்த சிலர் 
இல்லாமல் போயிருந்தால் 
இன்று நாம் 
இல்லாமலே போயிருப்போம் 

இருந்தும் இந்நாள் வரை 
வெறுப்பதே விருப்பமாய் 
அறியாமையில் அடித்துக்கொண்டே அழிவதுதான் 
பொழுது போக்க நாம் முயல்வது 

தான் நினைப்பதே நிஜம் என்று 
எதிர்ப்பவனை வெட்டித் தீர்க்க 
நினைக்காதவன் இந்த நாட்டில் எவனுமில்லை 

அதிர்ச்சி ஒன்றும் இல்லை இதை உணர்ந்ததில் 
கேவலம் நாம் பிறப்பால் வெறியர்கள் 

இந்த வெறிக்கும்பலில் 
சேர்ந்திருக்க ஆசையில்லை எனக்கு 
தனி மரமாய் தளர்ந்து விழுவதே மேல் 
தோப்பாய் எரிந்து மடிவதற்கு 

கேட்கிறது உங்கள் ஆணவக் குறள்
வெளியேற்றக் கத்துவது 

நான் நிஜமனைத்தும் சொல்லியிருந்தால் 
நிலம் அதிர்ந்திருக்கும் 
சொல்லியது சிலதே ஆனால் 
கதையென்று ஒன்றுமில்லை 
பதில் சொல்ல பயமும் இல்லை 
பதில் சொல்லிப் பயனும் இல்லை 
பதில் எதையும் மாற்றவும் போவதில்லை 
அதற்கு உங்களுக்கு தகுதியும் இல்லை

வெளியேறவும் மாட்டேன் 
நிலமென்றும் எவனுக்கும் சொந்தமில்லை 
இன்று நீங்கள் இங்கு 
நாளை எவனோ 

இங்குதான் பிறந்தேன் 
நிலத்திற்கு நான் சொந்தம் 
வேண்டுமென்றால் கொன்று விடுங்கள் 
அதுவொன்றும் புதிதில்லையே உங்களுக்கு 

ஆம் நான் சமூக விரோதிதான் 
உங்களின் இந்த விளங்காத 
சமூகத்தில் சேர விரும்பாத 
தனி ஒருவன் நான்